Skip to content

Mahi Abinanthan review for காதல் மந்திரம் சொல்வாயோ

1 Posts
1 Users
0 Reactions
70 Views
Site-Admin
(@veenaraj)
Honorable Member
Joined: 10 months ago
Posts: 213
Topic starter  

விமர்சனம் வழங்கியவர்: Mahi Abinanthan

காதல் மந்திரம் சொல்வாயோ❤️

✍️யோசி யோசி✍️

                  எவ்வளவு உயர்ந்த காதலாக இருந்தாலும் காதலிக்கும் போதும், திருமணத்திற்கு பின்னும் காதலை சொல்லும் காதல் மந்திரத்தை எதிர்ப்பார்க்கும் காதலன், காதலியின் மனம்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

முகில் :

             ரொம்ப அமைதியான சைலண்ட் கேரக்டர் தான் விரும்பி கேட்டும் அவன் கண்ணியமான பேச்சு, யாரையும் புன் படுத்தாத மனம். காதலி மறுத்த பின் அவளை விட்டு விலகி நிற்கும் பாங்கு, நட்பு, தங்கையின் மேல் கொண்ட பாசம். தோற்றத்தையும் அடையாளத்தையும் வைத்து போராடும் அவன் மனது எல்லாமே சூப்பர்.

💌ஸ்லோகன்💌

வெண்பாவின் மனதை ஆள நினைக்கும் வர்மாவுக்கும், சாருவின் காதல் கிடைக்க காத்திருக்கும் முகிலுக்கும் கிட்டியதா அந்த காதல் மந்திரம்??

காதல் மந்திரம் சொல்வாயோ❤️ விமர்சனம்

கைப் பிடித்த துணையின் காதல் மந்திரம் சொல்லும் அழகிய காதல் கதை❤️

முகில், அருள்மொழி இருவரும் நண்பர்களாக இருக்க, முகிலின் தங்கை என்று தெரியாமலே யாழினி வெண்பாவின் மேல் காதல் கொள்கிறான் அருள்மொழி வர்மா. நியாபக மறதியால் பல இடங்களில் அவமானத்தை சந்தித்த முகில் வர்மாவின் ஆஃபீஸில் வேலை செய்து சாருவை விரும்புகிறான். வர்மாவின் தாய் தேவகி பிரிந்து போன தன் அண்ணன் குடும்பத்தோடு இணைய அவர்களின் மகள் அம்முவை தான் வர்மா திருமணம் செய்ய வேண்டும் என விரும்புகிறார்.

முகிலின் காதலை மறுக்கும் சாரு அவளின் மாமன் மகனை மணக்க சம்மதிக்கிறாள். ஊரை சுற்றி திரியும் குடிக்கரனான ராகவுக்கு அவர்களின் அண்ணன் மகளை பேசி முடிக்கிறார்கள். வர்மாவின் காதலை ஏற்காத வெண்பாவுக்கும் அவளின் அத்தை மகனை திருமணம் செய்ய நினைக்கிறார்கள். இந்த நிலையில் ராகவ் குடித்து ஓட்டியதால் வர்மா, ராகவ் வண்டி ஆக்ஸிடென்டாக அதில் முகில் அநியாயமாக உயிர் இழக்கிறான். ஆறு மாதங்களுக்கு பின் வர்மா, ராகவ், வெண்பா, சாரு நால்வருக்கும் ஒரே நாளில் திருமணம் நடக்கிறது.

இந்த இரண்டு திருமணத்தில் யாரோடு யாருக்கு திருமணம் நடந்தது?? முகில் எப்படி இறந்தான்?? முகிலின் இறப்பால் வாடும் குடும்பத்திற்கு ராகவ் பற்றி தெரிய வந்தால் என்ன ஆகும்?? வெண்பா ஏன் வர்மாவின் காதலை ஏற்கவில்லை?? சாரு ஏன் முகிலின் காதலை மறுத்தாள்?? முகிலின் மறதிக்கு என்ன காரணம்?? ராகவ் திருந்தினானா?? நால்வரின் வாழ்க்கையும் எப்படி பயணித்தது?? யாருக்கு யார் காதல் மந்திரம் உறைத்தார்கள்?? என பல பல ட்விஸ்ட்களுடன் செம்ம சூப்பரான ஒரு லவ் ஸ்டோரி. 

வர்மாவின் காதல், பாசம் முகிலின் நட்பு, வெகுளி தனம், நல்ல மனது வெண்பாவின் பாசம், காதல், அண்ணன் மேல் கொண்ட அன்பு, ராகவின் மாற்றம், சாருவின் காலம் கடந்த காதல், மூன்று குடும்பங்களின் பாசம் இத்துடன் பல பாச போராட்டம், காதல், தவிப்பு, உண்மை என நினைச்சு பார்க்கவே முடியாத பல திருப்பங்களுடன் செல்லும் ஒரு அழகான காதல் கதை. எல்லார் மனதை கொள்ளை கொள்வது முகில் தான்...சோ ஸ்வீட் முகில். சூப்பர் லவ் ஸ்டோரி.

உங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துகள்...❤️😊

 

 


   
ReplyQuote