நீயென் காதலாயிரு...!
நீயந்த மேகமாயிரு ...!
வேண்டாம் வேண்டாம்
மேகமது காற்று வந்தால் கலைந்திடுவாய்...!
நீயந்த சூரியனாயிரு ...!
வேண்டாம் வேண்டாம்
இரவில் காணாது போய்விடுவாய் ...!
நீயந்த நிலவாயிரு...!
வேண்டாம் வேண்டாம்
பகலில் வர மறுப்பாய்... சில நாட்கள் தேய்ந்திடுவாய்...!
நீயந்த ஏழுவர்ண வானவில்லாயிரு...!
வேண்டாம் வேண்டாம்
வானவில் தினமும் வர்ணித்துவிடாது
நீயந்த மழையாயிரு...!
வேண்டாம் வேண்டாம்
இங்கே குளங்களில்லை உனைத் தேக்கிவைத்திட
நீயிங்கு என்தாய் மண்ணாயிரு...!
வேண்டாம் வேண்டாம்
ரியல் எஸ்டேட்காரர்கள் கூறுப் போட்டு
அடுக்குமாடி எழுப்பி விடுவார்கள்
நீயந்த மலர்வாசமாயிரு...!
வேண்டாம் வேண்டாம்
நுகர்வோர்களுக்கெல்லாம் சொந்தமாகிவிடுவாய்...!
நீயென் கவியாயிரு...!
வேண்டாம் வேண்டாம்
ரசனை கொண்டவர்கள் வாசித்துவிடுவார்கள்
நீயென் ஓவியமாயிரு...!
வேண்டாம் வேண்டாம்
கலைக் கண்களுக்கு காட்சிப் பொருளாயாகிடுவாய்...
நீயெந்தன் தங்க வைரமாயிரு ...!
வேண்டாம் வேண்டாம்
பெண்கள் உன்மீதே கண்பதிப்பர்
நீயந்த காற்றாயிரு..!.
வேண்டாம் வேண்டாம்
இப்போதெல்லாம் காற்றில் மாசு கலந்தே இருக்கின்றன
நீயென் தென்றலாயிரு ...!
வேண்டாம் வேண்டாம்
பின்னர் புயலாய் மாறிடுவாயோ..?! என்ற அச்சம் உண்டாகிடும்
நீ நீயாயிரு...!
நம் காதலை போல ,
ஆம் .
அது தான் மாறாதது , நிலையானது , திகட்டாதது .
நான் மரணித்தப்பின்னும் வாழ்வது
ஆம் ... நீயென் காதலாயிரு...!
-- பிரவீணா தங்கராஜ் .
- 115 Forums
- 1,461 Topics
- 1,697 Posts
- 1 Online
- 623 Members