அறிமுகம்
உங்களுக்கு பசிக்குமா?
இதென்ன கேள்வின்னு தோனுதா? கேள்வி கொஞ்சம் பைத்தியகாரத்தனமா கூட இருக்கலாம் ஆனாலும் கேட்கிறேன் உங்களுக்கு பசிக்குமா? இதற்கான பதில் ஒருவராவது இல்லை என்று சொல்ல முடியுமா...? இப்போது பசி இல்லையென்று சொல்லலாம் ஆனால் பசிக்கவே பசிக்காதுன்னு சொல்ல முடியாது இல்ல...
இந்த உலகத்தில் வாழும் மனிதனுக்கு மட்டுமல்ல ...,ஈ எறும்பில் ஆரம்பித்து சிங்கம் புலின்னு எல்லா உயிரினங்களுக்கும் பசிக்கும்.....செடி, கொடி ,மரம் போன்ற தாவரங்களுக்கும் பசிக்கும் (இதென்ன தாவரங்களும் சாப்பிடுமா கேட்காதீங்க நாம சிறு வயதில் அறிவியல் பாடத்திலேயே படித்திருப்போம் தனக்கான உணவை சூர்ய வெளிச்சத்தில் தாவரங்கள் தயாரித்து கொள்ளும் என்று ).
சுவாசமும், பசியும், தூக்கமும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது.சுவாசம் இதற்கான பயிற்சிகள் செய்யலாம் ஆனால் வேண்டாம் என்று தள்ளிப் போடவோ நிறுத்தி வைக்கவோ முடியாதில்லையா அது நிற்கும் நாள் நம் உயிர் பிரிந்திருக்கும்.... தூக்கம் இதுவும் இயற்கை வகுத்த நியதிகளில் முக்கியமானது இதை தள்ளி போடவும் முடியும் நம் விருப்பப்படி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தூங்கிடவும் முடியும் சரி தானே? அடுத்து பசி இதை கூட தள்ளி வைக்கலாம் ஆனால் சாப்பிடாமலே உயிர் வாழ்ந்திட முடியுமா? சாப்பிட்டே ஆக வேண்டும் உயிர் வாழ்ந்திட, சக்தி கிடைக்க ,தூங்கிட மொத்தத்தில் நாம் இயங்கிட சரி தானே.....
ஸ் ஸப்பா என்ன தான் சொல்ல வர்றீங்க ஒன்னும் புரியலன்னு நீங்க நினைக்கிறது புரியுது ஆனாலும் சில கேள்விகள் தேவையானது... அடுத்ததும் கேள்வி தான் ஆனா அதன் பின் நான் என்ன சொல்ல வர்றேங்கறத கண்டிப்பா சொல்லிடறேன்.....
பசிக்கு மட்டுமல்ல உயிர் வாழ சாப்பிடறோம்! ....நீங்க சாப்பிடும் சாப்பாட்டில் இருக்கும் கறிவேப்பிலை மட்டுமாவது உங்கள் வீட்டில் வளர்க்கபட்டதா? சேர்க்கும் மசாலாக்கள் உங்களால் தயாரிக்கபட்டதா? அதாவது சாம்பார் பொடி போன்றவை கடையில் வாங்காமல் உங்களால் தயாரிக்கபட்டதா...?
நாம் சமையலில் சேர்க்கும் அரிசி ஆரம்பித்து கடுகு வரை எதாவது ஒன்றை நீங்கள் விளைவித்தாலோ...மசாலா பொருட்களில் ஒன்று உங்களால் தயாரிக்க பட்டாலோ இதில் எதாவது ஒன்றிர்க்கு ஆம் என்ற பதில் வந்தாலும் பாராட்டி கொள்ளுங்கள் தற்சார்பு வாழ்வை விட்டு நான் விலகி போய் விடவில்லை என்று......
இல்லை நான் இதுவரையில் எதுவும் செய்யவில்லை ஆனால் இனி செய்ய ஆசை இருக்கிறது என்று நினைத்தால் உங்களோடு பயணிக்க நானும் தயாராக இருக்கிறேன்.... சிறுவயதில் இருந்து செடிகளை வளர்க்கும் அனுபவத்தை வைத்து தோட்டம் போடவும் அதிலிருந்து வருபவற்றை சமைக்கவும் எனக்கு தெரிந்த வரையில் உங்களுடன் பகிர்ந்து கொண்டு உங்களின் அனுபவத்தை கற்றுக் கொள்ளவும் வந்திருக்கிறேன்.
தற்சார்பு வாழ்வின் முதல் அடி என்ற தலைப்பில்.
🌿 பணம் செலவின்றி தோட்டம் அமைத்தல்.
🌿 சில மூலிகை சமையல்.
🌿 பொடி வகைகள் தயாரித்தல்.
🌿 ஊறுகாய் , வத்தல் தயாரித்தல்.
🌿 குளியல் பொடி , சீகைகாய் பொடி அரைத்தல்.
இதுபோன்ற நம்மால் முடிந்த பொருட்களை நாமே செய்து கொள்ள முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க..... கூடவே வண்ண கோலங்களும் கணிதத்தை கோலத்தில் சொல்லி கொடுத்த நெளி கோலங்களும் கூட தெரிந்து கொள்ளலாம்.
அழகான துவக்கம் நாங்க இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா சில தாவரம் பயிரிடறோம். மாடி தோட்டமாக. தங்கள் குறிப்பு உபயோகமாக மாறும்
- 115 Forums
- 1,538 Topics
- 1,785 Posts
- 3 Online
- 635 Members