Skip to content

தமிழ் மகளே-Harimala

1 Posts
1 Users
0 Reactions
217 Views
(@harimala)
Posts: 1
New Member
Topic starter
 

தரணியின் தமிழ் மகளே வாழ்க

பூரணமாய் என்னுள் நிறைந்தவளே என்தாயே

உன் பிறப்பில் வசந்தம் பூக்கட்டும்

பளிச்சென்ற புன்னகையில் பன்னீர் தூவட்டும்

நம்பிக்கைத் துளிர்கள் மரமாய் வளரட்டும்

வருடங்கள் தோறும் ஏதாவது எதிர்பார்ப்பு

வானம் பார்த்துக் கிடக்கும் பூமியாய்

நடப்பதோ வறண்ட வானிலையாய் என்றும்

எதற்காக ஏங்குவது என்றே தெரியாமல்

நிறைவேறா ஆசைகள் வரிசையில் நிற்க

உன் பிறப்பும் ஒருவகைப் புத்துணர்ச்சி

என்னுள் ஊறிக் கிடக்கும் தமிழமுதமே

இம்முறையும் ஏமாற்றாமல் பூர்த்தி செய்வாயா

கடைமடை பாயும் நீராய்ப் பெருகுவாயா

தமிழ் மகளே என்றும் நீ வாழியவே

 

ஹரிமாலா

 

 

 

 

 
Posted : 17/04/2024 4:42 pm