Skip to content
அழகிற்கு ஏதடி வர்ணங...
 
Notifications
Clear all

அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

1 Posts
1 Users
0 Reactions
182 Views
Daffodills
(@daffodills)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 72
Topic starter  

அழகிற்கு ஏதடி வர்ணங்கள்
பஜிஹா மும்தாஜ்

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலர். கருப்பு நிறப்பை, கருப்பு நிற கார், கருப்பு நிற உடை, கருப்பு நிற முடி, கருப்பை கொண்டாடும் யாரும் கருப்பான ஆட்களை காதலிக்கின்றார்களா?

திருமணத்திற்கு ஆணோ பெண்ணோ கருப்பு நிறம் என்றால் நிராகரிக்கின்றார்கள்.

அப்படிப்பட்ட‌ கருப்பான பெண் கலையரசியின் வாழ்வில் நிறத்தை வைத்து முடக்க நினைக்கின்றனர். ஆனாலும் கல்லூரி வரை வந்து சேர்கின்றாள் கலையரசி. ராகிங் என்று கருப்பான இவளை நால்வர் காயப்படுத்த யாதவ் வருகின்றான் நிறைய இடத்தில் காப்பாற்றுகின்றான்..
யாதவ் சி.எம் பையன். ஆணழகன், கல்லூரியில் பல பெண்களின் கனவுக் காதலன்.

எத்தனை அவமானங்கள் சந்தித்தாலும் தோழி ஶ்ரீ உண்மையான அன்பில் தெளிகின்றாள்.

அப்படியிருக்க கலையரசியை தெளிய வைத்து, காதலிக்கின்றான் ஒருவன்.‌

தன்னையும் ஒருவன் காதலிக்கின்றானா இருக்காது என்று ஒதுங்கி ஒதுங்கி செல்ல, நான் விரும்புகின்றேன் என்று ஆறுதலுரைத்து அழகு சாதனத்தை அள்ளி வந்து கொட்டுகின்றான்.‌

கலையரசியும் நல்ல நிறமாக மாறுகின்றாள்.

மாற்றம் அவளை ஒரு கட்டத்தில் வேறுவிதமாக மாற்றிவிடுகின்றது. என்ன மாற்றம்? என்று வாசித்து பாருங்க.

காதலனும் மாயமாக, அவள் தனக்கு நேரும் துரோகங்களை தனியாளாக வருந்தி சமாளிக்கின்றாள்.

காதலனை தண்டித்தாளா? யாதவை கரம் பற்றுவாளா? சி.எம் யாதவ் இவளை மணக்க காரணம்.? விடைகள் அறிய நேரம் எடுத்து வாசித்து பாருங்கள்.
https://praveenathangarajnovels.com/community/mark-10-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/


   
ReplyQuote