Skip to content
Arulmozhi Manavalan
 
Notifications
Clear all

Arulmozhi Manavalan

3 Posts
3 Users
0 Reactions
458 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 1 year ago
Posts: 673
Topic starter  

எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்

     என் பெயர் அருள்மொழி மணவாளன்.

மணவாளனின் இல்லத்தரசி.

கணவர் ஓவியம் சார்ந்த தொழில். அவருடன் சேர்ந்து ஓவியமும் ஆர்வமாக வரைவேன். ஓவியக் கண்காட்சியில் எனது சில ஓவியங்கள் விற்பனை ஆகியுள்ளது.

கதைகள் படிப்பதில் விருப்பம் உள்ளவள். அப்படி கதை படிக்க பிரதிலிபி செயலியை பயன்படுத்தும் பொழுது, 2021 'தந்தையர் தினத்தன்று' என் அப்பாவை பற்றிய என் நினைவுகளை எழுதி பதிவிட்டேன்.

அதில் என் பெயரின் கீழ் எழுத்தாளர் என்று வந்ததும் ஒரு மகிழ்ச்சி. அப்பொழுது அவர்கள் அறிவித்த போட்டியில் கலந்து கொண்டு கவிதை, சிறுகதை என்று எழுதினேன்.

சிறுகதை போட்டியில் வெற்றி. அதன் ஆர்வமாக தொடர்கதை எழுதலாம் என்று முதலில் ஒரு தொடர்கதை எழுத, அதுவும் போட்டியில் வெற்றி பெற்றது.

அதிலிருந்து மகிழ்ச்சியாக இன்று வரை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

1. இறைவி
2. ருத்ரமாதேவி
3. மோனலிசா
4. சித்தி
5. என் நினைவெல்லாம் நீயடி
என்ற தொடர்கதைகள் எழுதி முடித்துள்ளேன்.

6. யாழ் (ர்) இனியன் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என்னை எழுத்தாளராக ஊக்குவித்த நபர்களுள் பிரவீணா தங்கராஜ் முதன்மையானவர். அவர்கள் இத்தளம் ஆரம்பித்ததும், அதிலும் கதை எழுதலாம் என்று புதிதாக ஒரு தொடர்கதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
முகப்பு இல்லா பனுவல்.

எழுத்து என் தொழில் அல்ல. என் விருப்பம்.

அன்புடன்
அருள்மொழி மணவாளன்


   
ReplyQuote
Topic Tags